தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான கோவில்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (வயது 19) மற்றும் கோவில்பட்டி, லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (வயது 22) ஆகிய 2 பேரையும் இன்று (05.04.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






