திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் போக்சோ வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், காவல்கிணறை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் லெட்சுமணன் (வயது 24) போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார். அதேபோல் மற்றொரு வழக்கில் திசையன்விளை வட்டம், இடையன்குடி, தோப்பு தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் முத்துராஜா(29) போக்சோ வழக்கில் குற்றவாளி ஆவார்.
மேற்சொன்ன 2 பேர் மீதும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நேற்று (3.6.2025) மேற்சொன்ன 2 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






