இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 July 2025 11:38 AM IST
போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது
கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 4 July 2025 10:56 AM IST
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு: நிகிதாவிடம் இன்று விசாரணை..?
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக நிகிதாவிடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 4 July 2025 10:54 AM IST
"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது..." - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்
இந்த நிலையில், திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்காதது ஏன் என்பதற்கு இயக்குனர் ஜீத்து ஜோசப் விளக்கம் கொடுத்துள்ளார்.
- 4 July 2025 10:46 AM IST
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு.. சென்னை ஐகோர்ட்டில் தவெக மனு
மடப்புரம் கோவில் காவலர் அஜித் குமார் கொலை விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் மனு அளித்துள்ளது.
சென்னை சிவானந்த சாலையில் நாளை மறுநாள் (ஜூலை 06) போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- 4 July 2025 10:17 AM IST
மகளிர் டி20 கிரிக்கெட்; 3வது போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றியோடு தொடரை கைப்பற்றும் வேட்கையுடன் தயாராகி வருகிறது.
- 4 July 2025 10:15 AM IST
திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்
திருவள்ளூர், திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- 4 July 2025 10:14 AM IST
கோவையில் இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா: நாளை போக்குவரத்து மாற்றம்
கோவையில் உள்ள இஸ்கான் கோவில் தேர்த்திருவிழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவையில் நாளை பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- 4 July 2025 10:11 AM IST
பனையூரில் இன்று தவெக செயற்குழு கூட்டம்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.
- 4 July 2025 10:08 AM IST
தங்கம் விலை குறைவு... இன்றைய நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9.050-க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.120-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- 4 July 2025 10:06 AM IST
தனுசு
தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண நிச்சயர்தார்த்தம் நடக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சில அத்தியாவசிய காரியங்கள் தாமதமாகும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சுபிட்சம் காண்பர். யோகாவில் மனம் லயிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்
















