இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
தினத்தந்தி 5 July 2025 8:57 AM IST (Updated: 5 July 2025 8:16 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 5 July 2025 11:09 AM IST

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு


    பாதுகாப்பு காரணங்களுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


  • 5 July 2025 11:00 AM IST

    இளைஞர் அஜித்குமார் மரணம் - காவல்நிலையத்தில் நீதிபதி ஜான்சுந்தர்லால் விசாரணை


    மடப்புரம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக காவல்நிலையத்தில் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதன்படி இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

  • 5 July 2025 10:33 AM IST

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு


    பட்டாசு ஆலை விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அழகுராஜா மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் காரணமாக சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.


  • 5 July 2025 10:32 AM IST

    உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடிதடி... வீடியோ காட்சிகள்


    உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பலரும் கடும் அவதி அடைந்தனர். இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


  • 5 July 2025 10:30 AM IST

    ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி - 1000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


    ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி நடந்து வருகிறது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கழந்துகொண்டனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக சென்னை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரமாக்கியுள்ளனர்.


  • 5 July 2025 10:28 AM IST

    பீகாரில் அதிர்ச்சி; மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை


    6 ஆண்டுகளுக்கு முன்பு. இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.


  • 5 July 2025 9:56 AM IST

    தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?


    இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9,060-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


  • 5 July 2025 9:30 AM IST

    காணொலியில் ஆஜராக கோரிக்கை வைத்த மதுரை ஆதீனம் - காவல்துறை மறுப்பு


    உளுந்தூர்பேட்டை விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ளநிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் 2ஆம் முறையாக சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 5 July 2025 9:21 AM IST

    அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி


    அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக அஜித்குமார் மரணம் பற்றி நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். .

    இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் 4-வது நாளாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கி உள்ளார். 

  • 5 July 2025 9:19 AM IST

    விக்ரம் ரசிகர்கள் திட்டுகிறார்கள்...''சியான்63'' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


    விக்ரமின் 63-வது படத்தை 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.'மாவீரன்' படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின்கீழ் அருண்விஸ்வா இப்படத்தை தயாரிக்கிறார்.


1 More update

Next Story