இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 July 2025 9:17 AM IST
''பிரீடம்': ''1995-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்'' - சசிக்குமார்
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படத்தை தொடர்ந்து சசிகுமார் "பீரிடம்" படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி இருக்கிறார்.
- 5 July 2025 9:15 AM IST
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி; 10 மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
இந்திய வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம், சத்தீஷ்கார், கோவா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
- 5 July 2025 9:14 AM IST
அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி
அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- 5 July 2025 9:11 AM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடியும், பதினாறு கண் மதகு வழியாக 17,500 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- 5 July 2025 9:10 AM IST
ராணிப்பேட்டை: சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு 7-ம் தேதி விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு ஜூலை 7ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.
- 5 July 2025 9:09 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கான தடை நீடிப்பு
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
- 5 July 2025 9:07 AM IST
மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அமல்
தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 July 2025 9:06 AM IST
பர்மிங்காம் டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் 244 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா
இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்து டாங்கு பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன், 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
- 5 July 2025 9:03 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி: வெளியான முக்கிய அறிவிப்பு
கொரோனா பரவலின்போது நிதி நிலையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- 5 July 2025 9:01 AM IST
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதற்காக அவர் தனி விமானத்தில் கடந்த 2-ந்தேதி கானாவுக்கு புறப்பட்டு சென்றார்.
















