இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Jan 2026 9:56 AM IST
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 6 Jan 2026 9:55 AM IST
’அவருடைய நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போனேன்’...வைஷ்ணவி சைதன்யா
தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வைஷ்ணவி சைதன்யா கவனம் பெற்று வருகிறார். பேபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், அந்தப் படத்தின் வெற்றியால் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
- 6 Jan 2026 9:54 AM IST
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
சிலையின் கல்வெட்டில் சாமி நாகப்பன் என குறிப்பிடுவது சரியல்ல என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 6 Jan 2026 9:52 AM IST
வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது: டொனால்டு டிரம்ப்
வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.நிக்கோலஸ் மதுரோவை நிரந்தரமாக காணவில்லை என்று நீதிபதிகள் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து இருந்தால், 30 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டி இருக்கும்.
- 6 Jan 2026 9:51 AM IST
தேசிய சராசரியைத் தாண்டி தமிழ்நாடு சாதனை - மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்
வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 Jan 2026 9:50 AM IST
பயணிகள் கவனத்திற்கு… ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஐஆர்சிடிசி கொண்டு வந்த முக்கிய மாற்றம்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 6 Jan 2026 9:49 AM IST
தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி
சென்னையில் கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று காலை 11 மணியளவில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
- 6 Jan 2026 9:47 AM IST
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- 6 Jan 2026 9:46 AM IST
திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது. அங்கு ஆடு. கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்த இருப்பதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மாணிக்கமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை விலங்குகளை பலியிடுவதோ, அசைவ உணவுகளை பரிமாறுவதோ, இறைச்சியை மலைக்கு எடுத்துச் செல்வதோ கூடாது என்று தர்கா நிர்வாகத்திற்கு கடந்த 2-ந்தேதி உத்தரவிட்டார்.
- 6 Jan 2026 9:45 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


















