இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Nov 2025 10:01 AM IST
சென்னையில் பைக் சாகசம்: இருவர் உயிரிழப்பு
சென்னை பீட்டர்ஸ் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் பைக் ரேசில் ஈடுபட்டவர் உட்பட இருவர் உயிரிழந்தனர். ரேஸ் பைக் மோதியதில் எதிர்திசையில் வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த குமரன் (49) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பைக் சாகசம் செய்த ராயப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் சுகைல் உயிரிழந்தார். பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர் சுகைலின் நண்பர் சோயல் என்பவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- 6 Nov 2025 9:47 AM IST
2-வது டெஸ்ட்: இந்தியா ஏ-க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா ஏ பந்துவீச்சு தேர்வு
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
- 6 Nov 2025 9:45 AM IST
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,250-க்கும், சவரன் ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 6 Nov 2025 9:43 AM IST
முழு உற்சாகத்துடன் வாக்களியுங்கள் - பீகார் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
முதல்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 6 Nov 2025 9:31 AM IST
தென் ஆப்பிரிக்கா ஏ-க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய ஏ அணி அறிவிப்பு
இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ முதல் ஒருநாள் போட்டி வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது.
- 6 Nov 2025 9:29 AM IST
விற்பனைக்கு வந்த நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி.. ரசிகர்கள் ஷாக்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விற்க அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் வெற்றி, பிராண்ட் மதிப்பு உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- 6 Nov 2025 9:27 AM IST
"லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு" படத்தின் படப்பிடிப்பு.. பூஜையுடன் துவக்கம்
'அனகனகா ஒ அதிதி', தமிழில் 'கொன்றால் பாவம்', 'மாருதிநகர் காவல்நிலையம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன். இவர் தற்போது. உண்மை சம்பவமான லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கை மையமாக கொண்டு அதே பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
- 6 Nov 2025 9:25 AM IST
சீனாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 Nov 2025 9:24 AM IST
கோவை வன்கொடுமை சம்பவம்: வீடு,வீடாக சென்று கதவை தட்டி கதறிய மாணவி - உருக்கமான தகவல்கள்
கோவை பலாத்கார சம்பவத்தில் வீடு, வீடாக சென்று மாணவி உதவி கேட்ட உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
- 6 Nov 2025 9:23 AM IST
தொடர்மழை எதிரொலி.. திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.



















