இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Nov 2025 11:07 AM IST
மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் மீது வழக்குப்பதிவு
பழைய நிலையில் பணி வழங்கக்கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 6 Nov 2025 11:05 AM IST
மகளிர் உலகக்கோப்பை வெற்றி: ரிச்சா கோஷுக்கு பிரமாண்ட பாராட்டு விழா
அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- 6 Nov 2025 11:04 AM IST
அன்புமணியை மந்திரியாக்கி தவறு செய்து விட்டேன் - ராமதாஸ் பேட்டி
அன்புமணியின் செயல்பாடுகள் எதுவும் சரியாக இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
- 6 Nov 2025 10:45 AM IST
"எங்க அப்பா அரிவாளை எடுத்து.." மாரி செல்வராஜிடம் சீமான் சொன்ன பிளாஸ்பேக்
பைசன் படத்தை பார்த்து நான் வியந்துட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- 6 Nov 2025 10:34 AM IST
ஐ.பி.எல்.: தோனி ஓய்வு பெறப்போகிறாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன தகவல்
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் (2026) நடைபெற உள்ளது.
- 6 Nov 2025 10:33 AM IST
சபரிமலை பக்தர்களுக்காக 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்.. தமிழக அரசு சார்பில் அனுப்பப்படுகிறது
திருவாங்கூர் தேவஸ்தானம் 25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை கேட்டுள்ளதாகவும், அதனை 14-ந்தேதி அனுப்ப உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 Nov 2025 10:32 AM IST
வாகா எல்லை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 குற்றவாளிகளை விடுதலை செய்த பாகிஸ்தான் கோர்ட்டு
கைதான 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 300 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
- 6 Nov 2025 10:31 AM IST
‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 6 Nov 2025 10:29 AM IST
"அரசன்" படத்தின் கதை தரமா இருக்கும்.. ஆனால் - நடிகர் கவின்
இது வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
- 6 Nov 2025 10:05 AM IST
காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவு
பீகாரில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இந்தியா கூட்டணி முதல்-மந்திரி வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ராஜ்ஸ்ரீ யாதவ், முன்னாள் பீகார் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் தங்கள் வாக்கைச் செலுத்தினர். இந்த நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, பீகாரில் 13.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.



















