இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Nov 2025 10:18 AM IST
இந்தியா மீதான ‘டிரம்பின் வரி விதிப்பு, ஒரு ராஜதந்திர கருவி’ - அமெரிக்க வர்த்தக மந்திரி
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான டிரம்பின் வரி விதிப்பை அமெரிக்க வர்த்தக மந்திரி நியாயப்படுத்தி உள்ளார்.
- 8 Nov 2025 10:17 AM IST
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதிஅரேபியாவின் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் சபலென்கா (பெலாரஸ்) - அனிசிமோவா (அமெரிக்கா) மோதினர்.
- 8 Nov 2025 10:16 AM IST
இந்தியா ராணுவத்தின் ‘ஆபரேஷன் பிம்பிள்’ நடவடிக்கை - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 'ஆபரேஷன் பிம்பிள்' நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 8 Nov 2025 10:12 AM IST
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் உயர்ந்து. ஒரு கிராம் தங்கம் ரூ.11,300-க்கும், சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 8 Nov 2025 10:09 AM IST
திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் தங்குவதற்கு போலீசார் தடை விதிப்பு
திருச்செந்தூர் முருகன் கோயில் இரவு நேரத்தில் பக்தர்கள் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 8 Nov 2025 10:06 AM IST
எர்ணாகுளம் - பெங்களூரு உட்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்கள் சேவை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
லக்னோ - சஹாரன்பூர் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 8 Nov 2025 9:44 AM IST
பாகிஸ்தானின் ரகசிய அணு ஆயுத நடவடிக்கைகள் - இந்தியா பரபரப்பு குற்றச்சாட்டு
ஏ.ஹியூ. கானின் சட்டவிரோத நடவடிக்கைகளை சர்வதேச கவனத்தில் எடுத்துச் சென்று வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
- 8 Nov 2025 9:38 AM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 'ஆப்சென்ட்' எண்ணிக்கையை குறைக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 10 ஆயிரத்துக்கு குறையாமல் மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆகும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.
- 8 Nov 2025 9:37 AM IST
ஹாங்காங் சிக்ஸ் கிரிக்கெட்: இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்த குவைத்
'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் குவைத் உடன் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- 8 Nov 2025 9:35 AM IST
2-வது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்திய ஏ அணி தடுமாற்றம்
இந்தியா ஏ தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.




















