இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 10-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Oct 2025 10:34 AM IST
காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்
காசா முனையில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மந்திரி சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, காசாவில் போர் நிறுத்தம் இன்றுமுதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தற்போதைய போர் நிறுத்தம் தற்காலிகமானதாகும்.
இரு தரப்பும் ஒப்பந்தப்படி அனைத்து விதிகளையும் பின்பற்றும் பட்சத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு தரப்பு மீறினாலும் மீண்டும் போர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 10 Oct 2025 10:08 AM IST
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
- 10 Oct 2025 10:06 AM IST
சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி பொதுநல மனு தாக்கல்: இருமல் மருந்து வழக்கில் இன்று விசாரணை
இதுதொடர்பாக பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக்கோரி, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
- 10 Oct 2025 10:05 AM IST
சிறுநீரக மோசடி வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மனு மீது இன்று விசாரணை
ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
- 10 Oct 2025 10:04 AM IST
திருவண்ணாமலை: செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செண்பகத்தோப்பு அணையில் இருந்து நேற்று இரவு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 10 Oct 2025 10:03 AM IST
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- 10 Oct 2025 9:47 AM IST
பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 10 Oct 2025 9:46 AM IST
சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. புதிய உச்சத்தில் வெள்ளி விலை..! இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260-க்கும், ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
- 10 Oct 2025 9:45 AM IST
கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் தேர்வு
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- 10 Oct 2025 9:43 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
















