இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Oct 2025 10:25 AM IST
என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது - மொசின் நக்வி
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
- 11 Oct 2025 10:23 AM IST
டெல்லியில் பெண் நிருபர்களுக்கு தடை... ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி செயலால் சர்ச்சை
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு நாங்கள் எந்தவித இடமும் அளிக்கவில்லை என முத்தகி கூறினார்.
- 11 Oct 2025 10:22 AM IST
பீகார் தேர்தல்: பா.ஜ.க. கூட்டணிக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் அடுத்த மாதம் (நவம்பர்) 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ்-ராஷ்டிரீய ஜனதாதளம் இணைந்த இந்தியா கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
- 11 Oct 2025 10:19 AM IST
பிரான்ஸ் பிதமராக ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு பிரான்ஸ். இந்நாட்டின் ஜனாதிபதியாக இம்மானுவேல் மேக்ரான் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையிலான அரசின் ஆட்சி காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டு பிரான்ஸ் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தார். இதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
- 11 Oct 2025 10:14 AM IST
சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி விதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே 30 சதவீத வரி உள்ள நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வரி 130 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
- 11 Oct 2025 10:13 AM IST
அமெரிக்கா: ராணுவ ஆயுத ஆலையில் திடீர் வெடிவிபத்து; 19 பேர் பலி என அச்சம்
அமெரிக்காவின் தெற்கே டென்னஸ்ஸி மாகாணத்தின் ராணுவ வெடிபொருள் ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மக்களுக்கும் கேட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கின. சிலர் வெடிவிபத்து ஏற்பட்ட காட்சிகளை அவர்களுடைய கேமராவில் படம் பிடித்தனர்.
- 11 Oct 2025 10:11 AM IST
சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் சிலி நாட்டில் இருந்தும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
- 11 Oct 2025 10:10 AM IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...65,000 கன அடியாக உயர்வு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 30,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 65,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
- 11 Oct 2025 10:08 AM IST
தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- 11 Oct 2025 10:06 AM IST
இட்லியை கொண்டாடும் வகையில் சிறப்பு ’டூடுல்’ வெளியிட்ட கூகுள்
தென்னிந்திய உணவில் மிகவும் முக்கியமான இட்லியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது. இட்லியின் மகத்துவம் மற்றும் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.


















