இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 12 Oct 2025 10:53 AM IST
சென்னை: கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு
கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவன் ரோகித் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோகித்தின் உடல் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ஒதுங்கியது. இதையடுத்து, ரோகித்தின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 12 Oct 2025 10:52 AM IST
மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்கார சம்பவத்தில், தப்பியோடிய 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- 12 Oct 2025 10:27 AM IST
மூன்றாவது முறையாக இணையும் ரஜினி-நெல்சன்?
ரஜினியும் நெல்சனும் மூன்றாவது முறையாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 12 Oct 2025 10:25 AM IST
பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் அதிரடி தாக்குதல்
எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
- 12 Oct 2025 10:24 AM IST
தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?
சிம்புவை வைத்து நேரடி தெலுங்கு படத்தை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- 12 Oct 2025 10:22 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- 12 Oct 2025 10:20 AM IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று முதல்(12-10-2025) வரும் அக்.18ம் தேதி வரை 7 முதல் 11 செ.மீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் கணித்துள்ளது.
- 12 Oct 2025 10:15 AM IST
திமுக வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக சபாநாயகர் அப்பாவுவின் மகன் நியமனம்
திமுக வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நெல்லை கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக பதவி வகித்து வந்தார். - 12 Oct 2025 10:07 AM IST
எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்வது முக்கியம் - கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
- 12 Oct 2025 10:05 AM IST
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட்: இன்று தொடக்கம்
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 இருபது ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.



















