இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Nov 2025 12:03 PM IST
இயக்குநர் வி.சேகர் மறைவிற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இரங்கல்
வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- 15 Nov 2025 11:43 AM IST
விஜய் ஸ்டைலில் ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா....வீடியோ
ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
- 15 Nov 2025 11:42 AM IST
காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான் - போலீசார் விளக்கம்
ஜம்மு காஷ்மீரில் வெடிபொருள் வெடித்து 9 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 15 Nov 2025 11:41 AM IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நேற்று இரவு நடைபெற்ற பள்ளியறை பூஜையில் பங்கேற்றும் தரிசனம் செய்தார்.
- 15 Nov 2025 10:55 AM IST
தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள்.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்றும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக செயல்படுத்தும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 15 Nov 2025 10:47 AM IST
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
- 15 Nov 2025 10:30 AM IST
ஆட்டோ, டாக்சி கட்டணம்: 12 ஆண்டுகளாக உயர்த்தாமல் ஓட்டுனர்கள் வயிற்றில் அடிப்பதா? - அன்புமணி ராமதாஸ்
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன்களை பாதுகாக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 15 Nov 2025 10:15 AM IST
சிஎஸ்கே அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்
சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது. இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வந்தது. ஆனால் உறுதி செய்யப்படாமல் இருந்தது.
ஜடேஜா நீண்ட காலமாக சென்னை அணிக்கு விளையாடி வருகிறார். அணியின் முக்கிய வெற்றிகளுக்கு அவர் பங்காற்றியுள்ளார். மேலும் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுபவர் ஜடேஜா. இதனால் அவர் சென்னை அணியில் இருப்பார். டிரேடிங் செய்யப்படமாட்டார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை கொடுக்க 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க சென்னை அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜாவை சிஎஸ்கே அணி வழங்கி உள்ளது.
- 15 Nov 2025 10:09 AM IST
இளம் எம்.எல்.ஏ... பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாட்டுப்புற பாடகி
25 வயதே ஆன பாடகி மைதிலி தாகூர், அலிநகர் தொகுதியில் 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- 15 Nov 2025 10:08 AM IST
தர்மபுரி அருகே கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















