இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Nov 2025 10:06 AM IST
போதை விருந்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள்- போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள் கும்பலை சேர்ந்த முகமது சலீம் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
- 15 Nov 2025 10:05 AM IST
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
- 15 Nov 2025 10:04 AM IST
சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை அணி...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வேரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி . தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஜேமி ஓவர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.
- 15 Nov 2025 10:02 AM IST
தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 550-க்கும், சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 15 Nov 2025 10:00 AM IST
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைபெறுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு (இன்று) விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 15 Nov 2025 9:39 AM IST
தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்
18-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி லக்னோ, ஆமதாபாத், புனே, இந்தூர் உள்பட பல்வேறு இடங்களில் வருகிற 26-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 'எலைட்' பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோத உள்ளன.
'டி' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை ஆமதாபாத்தில் சந்திக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் அறிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 15 Nov 2025 9:37 AM IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறப்பு
கனமழை முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 300 கன அடியில் இருந்து 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.
- 15 Nov 2025 9:15 AM IST
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த ரெயில் டிக்கெட்டுகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- 15 Nov 2025 9:14 AM IST
நடிகர் தர்மேந்திராவை வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் கைது
படுக்கையில் இருந்த தர்மேந்திராவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்கினர்.
- 15 Nov 2025 9:12 AM IST
பீகார் தேர்தல் முடிவு அனைவருக்குமான பாடம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
















