இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

கோப்புப்படம்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 Nov 2025 1:54 PM IST
பீகார் சட்டசபை தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றுள்ளது.
- 15 Nov 2025 1:52 PM IST
கொல்கத்தா டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
- 15 Nov 2025 1:50 PM IST
“ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்”- கமல்ஹாசன்
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். எனவே ரஜினியில் 173வது படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
- 15 Nov 2025 1:30 PM IST
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இன்று (நவ.15ம் தேதி) மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
நாளை (நவ.16ம் தேதி) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேற்கண்ட தகவலை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 15 Nov 2025 1:18 PM IST
ஐபிஎல் அணிகள் டிரேடிங்கில் வாங்கிய வீரர்கள்....முழு விவரம்
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது.
- 15 Nov 2025 1:16 PM IST
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளனது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 15 Nov 2025 12:32 PM IST
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதலிடத்தை பிடித்த ரிஷப் பண்ட்
நடைபெற்று வரும் போட்டியில ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் அவர் சாதனை படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
- 15 Nov 2025 12:29 PM IST
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்
அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க இதுவரை தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
- 15 Nov 2025 12:28 PM IST
தமிழர்கள் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவிவிட்டது - அண்ணாமலை
ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 15 Nov 2025 12:26 PM IST
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார்.
















