இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 20 Dec 2025 10:21 AM IST
பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
மலையாள சினிமாவின் மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் (69) காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார்.
- 20 Dec 2025 10:20 AM IST
2024 -25இல் வட்டி ரூ.62,456 கோடி: 4 ஆண்டாக கடன், வட்டியில் தமிழகம் முதலிடம் - அன்புமணி
தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ. 9 லட்சத்து 55 ஆயிரத்து 690 கோடியாக உயர்ந்திருக்கிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
- 20 Dec 2025 10:18 AM IST
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 22ம் தேதி நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 20 Dec 2025 9:48 AM IST
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் மீண்டும் போராட்டம்
சென்னை சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்திய நர்சுகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைந்து வைக்கப்பட்டிருந்தனர்.
- 20 Dec 2025 9:46 AM IST
விக்கிரவாண்டி அருகே ஆற்றுப் பாலத்தில் மோதி ஆம்னி பேருந்து விபத்து - 35-க்கும் மேற்பட்டோர் காயம்
அதிவேகமாகச் சென்ற ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மைய தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
- 20 Dec 2025 9:45 AM IST
சென்னையில் கடும் பனிமூட்டம்: புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் சென்னை புறநகர் மின்சார ரெயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது.
- 20 Dec 2025 9:44 AM IST
'கே.ஜி.எப்., சலார்' பட உதவி இயக்குனரின் 4 வயது மகன் ‘லிப்ட்’-ல் சிக்கி பலி
ஐதராபாத்தில் நடிந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்த விபரீதம் நடந்துள்ளது.
- 20 Dec 2025 9:22 AM IST
பரபரப்பாகும் அரசியல் களம்.. த.வெ.க. தலைமையில் கூட்டணி அமைக்க தயாராகும் விஜய்
கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
- 20 Dec 2025 9:20 AM IST
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? - விரிவான தகவல்
முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 20 Dec 2025 9:14 AM IST
வண்ணார்பேட்டையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
















