இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 26 Sept 2025 12:58 PM IST
கவர்ச்சி இல்லை.. சிறப்புப் பாடல்கள் இல்லை...ஓடிடியில் கலக்கிக் கொண்டிருக்கும் காதல் படம்
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது யாரும் அதை பார்க்க ஆர்வம் காட்டவில்லை.
- 26 Sept 2025 12:10 PM IST
ரிலீஸுக்கு தயாரான ''தி ராஜா சாப்'' பட டிரெய்லர்
''காந்தாரா சாப்டர் 1'' படத்தை தயாரிக்கும் ஹோம்பலே பிலிம்ஸ், பிரபாஸுடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
- 26 Sept 2025 11:55 AM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. உற்சவர் மலையப்பசாமி 'குருவாயூர் கிருஷ்ணர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- 26 Sept 2025 11:54 AM IST
மத வழிபாட்டு தலத்திற்கு பார்சலில் வந்த பன்றி இறைச்சி - போலீசார் விசாரணை
சிங்கப்பூர் நாட்டின் செராங்கொன் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்நிலையில், இந்த வழிபாட்டு தலத்திற்கு நேற்று பார்சல் வந்தது.
அந்த பார்சலில் பன்றி இறைச்சி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 26 Sept 2025 11:31 AM IST
இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இவரது விலகல் அந்த அணிக்கு பலத்த பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு மாற்று வீரராக ஜோஹன் லெய்ன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 26 Sept 2025 11:28 AM IST
2 பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில்.. எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்ட பாக்... ரசிகர்கள் கிண்டல்
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் மோசமாக செயல்பட்டது. குறிப்பாக ஷாகீன் அப்ரிடி வீசிய ஒரு ஓவரில் பாகிஸ்தான் அணி எளிதான ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டது. ஷாகீன் அப்ரிடி வீசிய பந்தை எதிர்கொண்ட தவ்ஹித் ஹிரிடோய் பேக்வேர்டு பாயிண்ட் திசையில் அடித்தார். அதனை சைம் அயூப் அற்புதமாக தடுத்தார்.
- 26 Sept 2025 11:25 AM IST
ரிஷப் பண்ட் மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்..? அஜித் அகர்கர் கொடுத்த முக்கிய அப்டேட்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் 10-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று துபாயில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து தொடரில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் கேப்டனாக நீடிக்கிறார். இதில் அனைவரும் நினைத்தது போலவே விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை.
- 26 Sept 2025 11:23 AM IST
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம்: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற குல்தீப் யாதவ்
வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- 26 Sept 2025 11:06 AM IST
குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி. சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.















