இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025
x
தினத்தந்தி 28 Sept 2025 9:26 AM IST (Updated: 28 Sept 2025 8:31 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 28 Sept 2025 1:22 PM IST

    கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன: சதி நடந்துள்ளது... தவெக புகார்


    கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரத்தில்,சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்டபாணியின் இல்லத்திற்குச் சென்று த.வெ.க. சார்பில் முறையீடு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய உத்தரவிட கோரிக்கை வைத்தனர். மேலும் கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டன எனவும் திட்டமிட்டு சதி நடந்துள்ளது எனவும் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

    நாளை பிற்பகல் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.


  • 28 Sept 2025 1:19 PM IST

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை விசாரணை தொடக்கம்


    கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


  • 28 Sept 2025 1:15 PM IST

    கரூர் கூட்ட நெரிசல் : பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கவின் (39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 

  • 28 Sept 2025 12:46 PM IST

    "விஜய்யை கைது செய்ய வேண்டும்" - நடிகை ஓவியா

    விஜய்யை கைது செய்ய வேண்டுமென நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார்.

  • 28 Sept 2025 12:32 PM IST

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக முறையீடு குறித்து மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தவெக முறையீடு குறித்து மதுரை ஐகோர்ட்டில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

  • 28 Sept 2025 12:18 PM IST

    பிரீத்தி அஸ்ரானியின் புதிய படம்...ஹீரோ யார் தெரியுமா?

    இப்படத்தில் கீர்த்தனாவாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளனர்.

  • 28 Sept 2025 12:02 PM IST

    தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

    தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தவெகவினர் மீது எந்தவித அசம்பாவித தாக்குதலும் நடந்துவிடாமல் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 28 Sept 2025 11:56 AM IST

    ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: மழை குறுக்கிட வாய்ப்பா..? ரத்து செய்யப்பட்டால் கோப்பை யாருக்கு..?


    நடப்பு ஆசிய கோப்பையில் எந்த ஒரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்படவில்லை. அதேபோல இறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட வாய்ப்பில்லை என அங்குள்ள வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வானிலையை யாராலும் 100 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியாது.

    ஒருவேளை மழை பெய்து போட்டியை இன்று தொடங்க முடியவில்லை என்றால் ஆட்டம் 'ரிசர்வ் டே'-வுக்கு (மறுநாள்) ஒத்திவைக்கப்படும்.


  • 28 Sept 2025 11:51 AM IST

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - இன்றே விசாரணை தொடங்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம்

    த.வெ.க. கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழப்பு தொடர்பாக, அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இன்றே விசாரணையை தொடங்குகிறது

    இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூர் புறப்பட்டநிலையில், பிற்பகலில் இருந்து விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

  • 28 Sept 2025 11:40 AM IST

    பிடித்த இயக்குனருடன் 5-வது முறையாக கைகோர்க்கும் ஸ்டார் ஹீரோ

    கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் தங்கள் மாயாஜாலத்தை திரைக்குக் கொண்டுவர உள்ளது.

1 More update

Next Story