இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Nov 2025 10:50 AM IST
மருத்துவத்துறையில் காலிப்பணியிடமே இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
- 28 Nov 2025 10:48 AM IST
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிப்பு
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Nov 2025 9:46 AM IST
மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, தங்கம் ஒரு கிராம் ரூ.11,840-க்கும், ஒரு சவரன் ரூ.94,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 28 Nov 2025 9:44 AM IST
இலங்கையில் சூறாவளி காற்றுடன் பெய்து வரும் கனமழையால் 56 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 56 பேர் பலியாகி உள்ளனர்.
- 28 Nov 2025 9:43 AM IST
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலி: நைஜீரியாவில் அவசர நிலை அறிவிப்பு
மாணவர்கள் கடத்தல் சம்பவம் எதிரொலியாக நைஜீரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
- 28 Nov 2025 9:42 AM IST
கழிவுநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த கர்ப்பிணி... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
அர்ச்சனாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- 28 Nov 2025 9:39 AM IST
த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து
தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
- 28 Nov 2025 9:37 AM IST
துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டுக்கான முழு விளக்கம்...!
புயல் உருவாகி கடலோரப்பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும்போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கையை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. 1-ம் கூண்டு தொடங்கி 11-ம் எச்சரிக்கை கூண்டு வரை ஏற்றப்படுகின்றன.
- 28 Nov 2025 9:36 AM IST
டிட்வா புயல் எதிரொலி: ராமேசுவரத்தில் சூறைக்காற்று - பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தம்
ராமேசுவரத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கையாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
- 28 Nov 2025 9:35 AM IST
உலகின் தலைசிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு இடம் இல்லை
கனடாவை தலைமையிடமாக கொண்ட 'ரெசோனன்ஸ் கன்சல்டன்சி' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களை மதிப்பீடு செய்து இந்த பட்டியலை வெளியிடுகிறது.




















