இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Oct 2025 4:27 PM IST
போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும் சென்னை சாலைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வருகிறது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை.
- 31 Oct 2025 4:18 PM IST
சென்னையில் கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்
சென்னை எண்ணூர் பெரிய குப்பத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒரு மாணவி உட்பட 4 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின. கடல் அலையில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருக்கலாம் என விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
- 31 Oct 2025 4:16 PM IST
முதல்-அமைச்சர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்: அண்ணாமலை
பிரதமர் சொல்லாத ஒரு விஷயத்தை முதல்-அமைச்சர் கூறுகிறார்; அவர் தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; பிரதமர் மோடி தமிழக மக்களைப் பற்றி தவறாக கூறிவிட்டதாக முதல்-அமைச்சர் கூறுகிறார். திமுக தலைவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக மோடி பீகாரில் பேசினார். தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா, ஆ.ராசா போன்றவர்கள் பீகார் மக்களை அவமானப்படுத்தினார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- 31 Oct 2025 2:53 PM IST
சென்னையில் வடகிழக்கு பருவமழை 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது - வானிலை மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 36 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 171.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 233.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை 29 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது, 354.7 மிமீ மழை பதிவு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 31 Oct 2025 1:50 PM IST
அட்டகாசம் திரைப்படம் தள்ளிவைப்பு...ரசிகர்கள் ஏமாற்றம்
கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
- 31 Oct 2025 1:48 PM IST
ரூ.3,250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தி: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்க பயணத்தின் போது போர்டு நிறுவனம் உறுதியளித்தபடி ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மறைமலை நகரில் அடுத்த தலைமுறை வாகன என்ஜின் உற்பத்தி மேற்கொள்வதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 31 Oct 2025 1:40 PM IST
யாருடைய ஈகோ வெற்றிபெற்றது? - ''ஆண்பாவம் பொல்லாதது''- சினிமா விமர்சனம்
கலகலப்பும், எமோஷனலும் சரிவிகிதத்தில் கொடுத்து கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார், ரியோராஜ்.
- 31 Oct 2025 1:23 PM IST
பள்ளிக்கரணை சதுப்பு நில கட்டட பணிகளை நிறுத்த ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சதுப்பு நிலப் பகுதியில் 1,400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு தரப்பில், "சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வுப் பணிகள் 2 வாரங்களில் முடியும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, "சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி" என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் இந்த மனு மீது வருகிற நவம்பர் 12-ந்தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 31 Oct 2025 12:56 PM IST
பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் மூவரும் இணைந்து வந்து மரியாதை செலுத்தியது குறித்து ஆர்.பி. உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆர்.பி. உதயகுமார், "ஒரு நாள் பரபரப்பு அது. நீங்கள் அதை கூடுதல் பரபரப்பு பண்ணாமல் இருந்தால் எல்லாம் சரியாகி விடும். இது எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது. இது ஒன்றும் புதிதல்ல" என்று கூறினார்.
















