இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Oct 2025 12:43 PM IST
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 31 Oct 2025 11:52 AM IST
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,300-க்கும், ஒரு சவரன் ரூ.90,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 31 Oct 2025 11:36 AM IST
இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு... பீகாரில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பீகார் தேர்தலுக்கான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து 69 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
- 31 Oct 2025 11:15 AM IST
தமிழகத்தின் அவமான சின்னமாக திமுக இருக்கிறது: அண்ணாமலை கடும் தாக்கு
தமிழக அமைச்சர்கள் பொன்முடி. டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பீகார் மக்களை ஏளனமாகப் பேசியதையும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதையும், தமிழக மக்கள் அறிவார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பாரதப் பிரதமர் தமிழகத்தில், பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, மு.க.ஸ்டாலின். வகிக்கும் முதல்-அமைச்சர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை முதல்-அமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
- 31 Oct 2025 10:21 AM IST
முன்பு மருத்துவர்...இப்போது ரசிகர்களின் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளும் நடிகை - யார் அவர் தெரியுமா?
அவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
- 31 Oct 2025 10:00 AM IST
அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் கள்ளக்காதலி - தோழி அதிரடி கைது... பரபரப்பு தகவல்கள்
சென்னை அசோக் நகரில் நடந்த அரசு காண்டிராக்டர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி மற்றும் தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 31 Oct 2025 9:59 AM IST
உலகக் கோப்பையை வென்று வாருங்கள் - இந்திய மகளிர் அணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 31 Oct 2025 9:19 AM IST
இட்லி கடை, லோகா, காந்தாரா...இந்த வார ஓடிடி ரிலீஸ் - எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
இந்த வாரத்தில் இட்லி கடை, லோகா, காந்தாரா மற்றும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
- 31 Oct 2025 9:12 AM IST
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. மேலும் பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார்.
















