‘அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?’ - எல்.முருகன்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்துகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் வழிபாடு நடத்தி கட்சியினருக்கு பிரசாதங்கள் வழங்கினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது;-
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கொரோனா காலகட்டத்திலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் முன்கள பணியாளர்களாக நின்று பணி செய்தவர்கள். அப்படிப்பட்ட இயக்கத்தினரின் கருத்தை அ.தி.மு.க. கேட்பது மிகவும் வரவேற்கத்தக்கதுதான்.
ஆர்.எஸ்.எஸ். என்பது சுதந்திரமான அமைப்பு. நூறு ஆண்டுகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அமைப்பு. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அ.தி.மு.க.வை வழிநடத்துவதில் என்ன தவறு? ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பார்த்து த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்."
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






