பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - தவெக தலைவர் விஜய் கேள்வி


பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - தவெக தலைவர் விஜய் கேள்வி
x

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. அதன்படி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர், பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கியுள்ளார். அவர் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று நாகை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,

மக்களை, நமது சொந்தங்களை சந்திக்க எத்தனை கட்டுப்பாடுகள். பிரசாரம் மேற்கொள்ள அங்கு அனுமதியில்லை, இங்கு அனுமதியில்லை என்று கூறுகின்றனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டால் மிகவும் சிறிய காரணங்களாக இருக்கும். 5 நிமிடம் தான் பேசவேண்டும், 10 நிமிடம்தான் பேசவேண்டும் என்று கூறின்றனர். நான் பேசுவதே 3 நிமிடம்தான். அதிலும் நான் அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்றால் நான் எதைத்தான் பேசுவது.

அரியலூருக்கு நான் பிரசாரத்திற்கு சென்றபோது அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருச்சியில் நான் பேசத்தொடங்கியதும் ஸ்பீக்கருக்கு செல்லும் ஓயர் துண்டிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். தலைவரோ, பிரதமர் மோடியோ, உள்துறை மந்திரியோ இங்கு வருகிறார் என்றால் இதுபோன்று கட்டுப்பாடுகள் போடுவீர்களா? மின்தடை செய்வீர்களா? இதுபோன்று ஓயரை துண்டிப்பீர்களா? முதல்-அமைச்சர் சார்? கொஞ்சம் துண்டித்துதான் பாருங்களேன்... முடியாது அல்லவா? பேஸ்மெண்ட் அதிரும் அல்லவா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள்தானே

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story