திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

ஆவரைகுளத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 மீட்டர் நீளம் உள்ள காப்பர் கேபிள் வயர் திருடு போனது.
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், பாலையா மார்த்தாண்டம் பள்ளி அருகில் உள்ள காற்றாலையில் 80 மீட்டர் காப்பர் வயர் 30.6.2025 அன்று திருடப்பட்டுள்ளது. அதே போல் பழவூர், சிவஞானபுரத்தில் உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்த துரைக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 200 மீட்டர் நீளம் உள்ள காப்பர் கேபிள் வயர் நேற்று திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கஸ்தூரிரெங்கபுரத்தைச் சேர்ந்தவரும் காற்றாலையின் மேனேஜருமான பாலச்சந்தர் (வயது 46) மற்றும் ஆவரைகுளத்தைச் சேர்ந்த துரை கண்ணன்(51) ஆகிய இருவரும் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் வேதமாணிக்க சாம்ஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் காற்றாலை கம்பெனி மற்றும் சிவஞானபுரம் தோட்டம் ஆகிய இரண்டு இடங்களிலும் இருந்த காப்பர் வயரை திருடியது, சங்கனாபுரத்தைச் சேர்ந்த மாசாணம்(46) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், மாசானத்தை நேற்று கைது செய்து நடவடிக்கை எடுத்தார்.