திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கீழதுவரைகுளத்தை சேர்ந்த அரிராமன் (வயது 45) என்பவர் சொந்தமாக ரேடியோ செட் வைத்து தொழில் செய்து வருகிறார். 12.11.2025 அன்று ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதால், அரிராமன் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் கீழதுவரைகுளத்தை சேர்ந்த சடையாண்டி மகன் சுப்பையா(38) என்பவர் ரேடியோ செட் வயரை திருடியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், சுப்பையாவை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ரேடியோ செட் வயரை மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com