சென்னை: விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர் கைது

இளைஞரை கைதுசெய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
இண்டிகோ விமானம் ஒன்று இன்று சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு164 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென விமானத்தில் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இளைஞரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவசர கால பட்டனை தவறுதலாக அழுத்தி விட்டதாகவும், தன்னை மன்னித்து விடுமாறும் கைதான இளைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும், அந்த இளைஞரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






