திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழபாப்பாக்குடி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பாப்பாக்குடியை சேர்ந்த கனி (வயது 30) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கனியை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com