நெல்லையில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது

பிரேமா நாங்குநேரி, பெரும்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த குத்துவிளக்கை காணவில்லை.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம், நாங்குநேரி, பெரும்பத்தை சேர்ந்த பிரேமா (வயது 48) என்பவர் ஒரு வருட காலமாக ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்து வருகிறார். அவர் 3.5.2025 அன்று பெரும்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த குத்துவிளக்கை காணவில்லை. இதுகுறித்து பிரேமா நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் பெரும்பத்தை சேர்ந்த ஐயப்பன்(22), குத்துவிளக்கை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், ஐயப்பனை நேற்று முன்தினம் (4.5.2025) கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து குத்துவிளக்கை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






