வள்ளியூரில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


வள்ளியூரில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Jun 2025 12:03 AM IST (Updated: 29 Jun 2025 12:05 AM IST)
t-max-icont-min-icon

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் பூதலிங்கம் (வயது 31) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், பூதலிங்கம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Next Story