திசையன்விளை அருகே இளம்பெண் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே குதிக்க முயன்ற வாலிபர்கள்

மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளம்பெண்ணின் வீட்டின் மேற்கூரையில் ஏறினர்.
திசையன்விளை அருகே இளம்பெண் வீட்டு ஓட்டை பிரித்து உள்ளே குதிக்க முயன்ற வாலிபர்கள்
Published on

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இளம்பெண் உள்பட 3 பேரும் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென இளம்பெண்ணின் வீட்டின் மேற்கூரையில் ஏறினர். அங்கிருந்த ஓடுகளை பிரித்து உள்ளே எகிறி குதிக்க முயன்றார்கள் சத்தம்கேட்டு எழுந்த இளம்பெண், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் திருடன்...திருடன்! என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் பக்கத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் (19) ராஜேஷ்குமார் (29) ஆகியோரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து ரஞ்சித், ராஜேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com