மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது.
மோன்தா புயல்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி சென்னைக்கு தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற்றியுள்ளது. இது வங்கக்கடலில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மறுதினம் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோன்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோன்தா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com