தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் சதமடித்த வெயில்


தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் சதமடித்த வெயில்
x

மதுரையில் 102 மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

சென்னை,

கோடை காலம் தொடங்கியதை அடுத்து, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தபோதும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி மதுரை மற்றும் திருச்சியில் அதிகமாக பதிவாகி இருக்கிறது. அதன்படி மதுரையில் 102 மற்றும் திருச்சியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

பாளையங்கோட்டை மற்றும் ஈரோட்டில் 99 டிகிரியும் வேலூர் மற்றும் சேலத்தில் 98 டிகிரியும், நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 97 டிகிரி பாரன்ஹீட் அளவிலும் வெயிலானது பதிவாகி உள்ளது.

1 More update

Next Story