காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

கோப்புப்படம்
காலை 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (03.02,2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story