காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?

காலை 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நேற்று முன் தினம் (24-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மாலை 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவியது. இது, நேற்று (25-10-2025) காலை 5:30 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8:30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று இரவு சென்னைக்கு 890 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. இது இன்று (26-10-2025) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை (27ஆம் தேதி) புயலாக மாறும் என்றும், 28ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர கடற்கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் காலை 7 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி

மயிலாடுதுறை

தஞ்சாவூர்

நாகை

திருவாரூர்

ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ய்புள்ளதாக சென்னை வானிலை ஆவ்ய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com