ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்


ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல்
x

ஈரானில் நோபல் பரிசு வென்றவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரான்,

ஈரானைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர் நர்கெஸ் முகமதி. இவர் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதற்காக பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது.

இந்தநிலையில் பெண்களுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story