மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி


மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி
x

மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்கா நாடானா மெக்சிகோவின் தபஸ்கோ மாகாணம் வில்லாஹெர்மோசா என்ற பகுதியில் மதுபான விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று வழக்கம்போல் மதுபிரியர்கள் மது குடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, மதுபான விடுதியில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. மதுபான விடுதிக்குள் திடீரென நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.

1 More update

Next Story