ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்


ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Dec 2024 2:51 PM IST (Updated: 14 Dec 2024 5:00 PM IST)
t-max-icont-min-icon

ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டிற்கும் ரஷியாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாகவே மோதல் நிலவி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஒரே இரவில் 37 உக்ரைன் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று இரவு ரஷியா கூட்டமைப்பின் எல்லையில் உள்ள இலக்குகள் மீது டிரோன்களை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை நடத்த உக்ரைன் முயன்றபோது, ரஷிய ராணுவம் அதை இடைமறித்து அழித்தது என்றும் 12 டிரோன்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், 12 கிராஸ்னோடர் பிரதேசத்தின் மீதும், ஏழு பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் மீதும், ஐந்து ஓரியோல் பிராந்தியத்தின் மீதும் மற்றும் ஒன்று அசோவ் கடல் மீதும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story