தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்


தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்
x

தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். கடந்த 12.04.2024 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மவுன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story