அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று அ.தி.மு.க. தனது கூட்டணியில் ஓரளவு தொகுதி பங்கீடை முடித்தது. அதன்படி தே.மு.தி.க.வுக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
அ.தி.மு.க. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:-
கோவை - சிங்கை ராமச்சந்திரன்
திருச்சி - கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - பாபு
ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
தருமபுரி - அசோகன்
திருப்பூர் - அருணாசலம்
நீலகிரி - லோகேஷ்
வேலூர் - பசுபதி
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
சிவகங்கை - சேகர் தாஸ்
நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
கன்னியாகுமரி - பசிலியா நசரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி
33 தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாக போட்டியிடுகிறது.