நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்; வேட்பாளர்கள் தேர்வு பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 1 April 2024 11:20 AM IST (Updated: 1 April 2024 2:14 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேச மற்றும் தெலுங்கானா மக்களவை தேர்தலில் போட்டியிட கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றி சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், ஆந்திர பிரதேச மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள், தெலுங்கானா மக்களவை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இதனை முன்னிட்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான சோனியா காந்தி, கட்சியின் மூத்த தலைவர் மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரியான ரேவந்த் ரெட்டி ஆகியோர் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகை தந்துள்ளனர்.

இதேபோன்று, இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் வந்துள்ளனர்.


Next Story