பா.ஜ.க. நிர்வாகி தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்
பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story