காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.பி.


காங்கிரசில் இணைந்த பா.ஜனதா எம்.பி.
x

பீகாரின் முசாபர்பூரை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. அஜய்குமார் நிஷாத் காங்கிரசில் இணைந்தார்

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போதைய பா.ஜனதா எம்.பி.யாக இருப்பவர் அஜய்குமார் நிஷாத்.

இவர் நேற்று பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.

அவர் இதுகுறித்து பேசும்போது, "நான் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவன். ஆனால் இப்போது எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்கு சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவரின் ஆணவத்தை அடித்து நொறுக்க, இழந்த சுயமரியாதையை திரும்பப்பெற வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்சியில் சேர்ந்துள்ளேன்" என்று கூறினார்.


Next Story