பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி குறித்து சிலர் பேசுவது வயிற்றெரிச்சல் - அன்புமணி ராமதாஸ்


பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி குறித்து சிலர் பேசுவது வயிற்றெரிச்சல் - அன்புமணி ராமதாஸ்
x

சமூக நீதிக்காக தி.மு.க. - அ.தி.மு.க. செய்தது என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தர்மபுரியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைய பா.ம.க. பொதுக்கூட்டத்தில் பல செய்திகளை கூறுவோம். பா.ம.க. திடீரென பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்ததுபோல் சிலர் பேசுகின்றனர். இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி குறித்து சிலர் பேசுவது வயிற்றெரிச்சல்.

சமூக நீதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் என்ன செய்தார்கள். பா.ம.க. இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர வாய்ப்பு இல்லை. கூட்டணி என சொன்னதால் தான் 10.5% ஒதுக்கீடுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பு கொண்டார்.

அடையாள அரசியல் பா.ம.க.விற்கு தெரியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி எத்தனை முறை சந்தித்தார் ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார் மு.க.ஸ்டாலின். அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதைபோல் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story