பா.ஜனதாவில் சேரச்சொல்லி மிரட்டும் விசாரணை அமைப்புகள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


பா.ஜனதாவில் சேரச்சொல்லி மிரட்டும் விசாரணை அமைப்புகள் - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று தங்கள் கட்சியினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அவர், "என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவை பா.ஜனதாவின் கருவிகளாக இயங்குகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை துன்புறுத்த பயன்படுத்தப்படுகின்றன. தகவல் தெரிவிக்காமல் வீடு புகுந்து சோதனை நடத்துகின்றன. நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்தால் பெண்கள் என்ன செய்வார்கள்?

''பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள்'' என்று எங்கள் கட்சியினரை விசாரணை அமைப்புகள் மிரட்டுகின்றன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராததால், தேர்தலுக்கு பிறகு மாநில அரசே ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும்" என்று அவர் பேசினார்.


Next Story