காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தி.மு.க. வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தி.மு.க. வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

இது கொள்கையால் ஒன்றிய கூட்டணி என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் காங்கிரஸ் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் , மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும். நீட் தேர்வு நடத்தலாமா வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தி.மு.க. வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அடிமை அ.தி.மு.க அடகு வைத்த, பாசிச பா.ஜ.க பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க 'இந்தியா' கூட்டணிக்கு வாக்களியுங்கள்.நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி,மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி. என தெரிவித்துள்ளார்.


Next Story