பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட த.மா.கா


பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: தேர்தல் அறிக்கை வெளியிட்ட த.மா.கா
x

காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னை,

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று த.மா.கா தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் த.மா.கா ஈரோடு, தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 தொகுதிகளில் களம் காணுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான த.மா.கா தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், த.மா.கா பொருளாளர் இ.எஸ்.எஸ். ராமன் உள்பட பலர் பங்கேற்றார்கள்.

த.மா.கா தேர்தல் அறிக்கையில், 'மத்திய அரசுடன் இணைந்து மதுவிலக்கால் ஏற்படும் நிதி நெருக்கடியை சரி செய்து பூரண மதுவிலக்கை கொண்டுவர த.மா.கா பாடுபடும். போதை பொருட்களை முழுமையாக தடை செய்ய கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உறுதி அளிக்கும். பாலியல் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனை, மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதை சட்டவடிவமாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு த.மா.கா துணை நிற்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளில் கட்டாய தமிழ் பாடத்துடன் கூடிய கல்வி முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்பது உள்பட 23 வாக்குறுதிகளை த.மா.கா. வெளியிட்டுள்ளது.

அதன்பிறகு, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறுகையில், 'தேர்தல் கமிஷன் பா.ஜனதா கூட்டணிகளுக்கு முன்கூட்டிய சின்னங்களை ஒதுக்கீடு செய்ததாக சொல்வது தவறு. நான் 2021 சட்டசபை தேர்தலில் எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை. தற்போது, சட்டப்படி தேர்தல் சின்னம் கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி இனி எப்போதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது' என்றார்.


Next Story