தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நடுவழியில் மடக்கிய பறக்கும் படை


தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நடுவழியில்  மடக்கிய பறக்கும் படை
x
தினத்தந்தி 29 March 2024 10:51 AM IST (Updated: 29 March 2024 10:52 AM IST)
t-max-icont-min-icon

சோதனையில் வாகனத்தில் எதுவும் இல்லாததையடுத்து ஆ.ராசாவின் காரை பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் காரில் வந்தனர்.

பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்வதைக் கண்டு அவர்களின் கார்களை சாலையோரமாக நிறுத்தி, காரில் இருந்து இறங்கி தங்களது வாகனங்களையும் சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் கார்களுக்குள் சோதனை செய்தனர். சோதனை முடியும் வரை காரில் இருந்து இறங்கி நின்றிருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஊட்டிக்கு சென்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


1 More update

Next Story