எடப்பாடி பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் மாற்றம்


எடப்பாடி பழனிசாமி பிரசார சுற்றுப்பயணம் மாற்றம்
x

வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் கீழ்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

13-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர். மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதி-துறையூர் சாலை, கனரா வங்கி அருகில், பெரம்பலூர் (வேன் பிரசாரம்), இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ்.14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி-மாலை 4.30 மணிக்கு எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர், மாலை 5.30 மணிக்கு தியாக துருகம் ரோடு, யமாகா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி. இரவு 7 மணிக்கு விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் நகரம்.15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம், மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதியில் டானா தெரு, புரசைவாக்கம், இரவு 7 மணிக்கு சென்னை தெற்கு தொகுதி வேளச்சேரி ரோடு, சின்ன மலை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story