ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி மேலிடம் நேற்று வெளியிட்டது.
இதில் ஆந்திராவுக்கு 9 வேட்பாளர்களும், ஜார்கண்டுக்கு 2 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு இருந்தனர். கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு தேர்வு செய்த இந்த பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டார்.
இதில் முக்கியமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் தொகுதியில் பரமேஸ்வரராவ், விஜயநகரத்தில் பொப்பிள்ளி ஸ்ரீனு, விஜயவாடாவில் வல்லூரு பார்கவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story