இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - எந்த தொகுதியில் யார்..?


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - எந்த தொகுதியில் யார்..?
x
தினத்தந்தி 18 March 2024 11:06 AM GMT (Updated: 18 March 2024 11:35 AM GMT)

நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் (தனி), திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என தேர்வு செய்யும் பணி கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக நடந்து வந்தன.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார்.


Next Story